Saturday, July 24, 2010

கணினியைப் பயன்படுத்துதல்

ஒரு கணினியைத் தொடங்க கணினி யூனிட்டில் உள்ள பவர் பட்டனை அழுத்தவும். கணினியைத் தொடங்கியவுடன் வரிசைப்பலகையிலுள்ள விளக்குகள் விரிவாக சிமிட்டலாம். மற்றும் நீங்கள் ஒரு பீப் ஒலியையும் கேட்கலாம். இது பவர்-ஆன் சுய பரிசோதனை (அல்லது பிஓஎஸ்டி) தொடங்கியுள்ளது என்பதற்கான அடையாளம் ஆகும்.

மதர்போர்டு, நினைவகம், வன்தட்டு மற்றும் பிற உபகரணங்கள் வேலைசெய்கின்றனவா என்பதை சரிபார்க்க கணினியானது தொடர் விரைவுச் சோதனைகளை மேற்கொள்ளும்.

தொடர் பீப்களை நீங்கள் கேட்டால், திரையகம் ஒரு உபகரணம் வேலை செய்யவில்லை என்றத் தகவலை காண்பிக்கலாம். உதாரணமாக, வரிசைப்பலகையின் கம்பி இழை இணைக்கப்படவில்லை என்றால் வரிசைப்பலகை கண்டறியப்படவில்லை என்ற பிழைச் செய்தி வரலாம்.

பிஓஎஸ்டி-க்குப்பின் கணினியானது இயக்க முறைமையை தொடங்குகிறது. மற்றும் பின்னர் உள்நுழை திரையைக் காண்பிக்கிறது. இப்போது நீங்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி இயக்க முறைமைக்குள் உள்நுழைகிறீர்கள். ஒரு கணினியைத் தொடங்கிய பின், அதற்கு நீங்கள் அறிவுரை அளிக்க இயக்க முறைமை அனுமதிக்கிறது.

இயக்க முறைமை கணினியின் வன்பொருளைக் கட்டுப்படுத்துகிறது. மற்றும் கணினியின் செயல்பாடுகள் மற்றும் உள்நுழை, வெளியேறு மற்றும் நிறுத்துதல் போன்ற பணிகளை மேலாண்மை செய்கிறது.

உதாரணமாக, விண்டோஸ் எக்ஸ்பி-க்குள் உள்நுழைய, நீங்கள் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை தட்டச்சு செய்வது அவசியம். பயனர் கணக்கிற்கான அமைப்புகள் புகுத்தப்பட்டு இப்போது விண்டோஸ் எக்ஸ்பி-க்குள் உள்நுழைந்து விட்டீர்கள். உள்நுழைந்த பின் ஒரு புதிய கோப்பினை உருவாக்குவது அல்லது தற்போதுள்ள கோப்பை மாற்றி அமைப்பது போன்ற பல்வேறு பணிகளை நீங்கள் செய்யலாம்.

தேவைப்படும் பணிகளை செய்த பின்பு கோப்பில் நீங்கள் செய்த மாறுதல்களை சேமிப்பது அவசியம். பின்னர் விண்டோஸ் எக்ஸ்பி-யில் இருந்து நீங்கள் வெளியேறலாம். வெளியேற, தொடங்கு என்பதை கிளிக் செய்து, பின்னர் வெளியேறு என்பதை கிளிக் செய்வது அவசியம்.

உங்கள் கணினியை பாதுகாப்பாக அணைக்க கண்டிப்பாக விண்டோஸ் எக்ஸ்பி-யை நிறுத்த வேண்டும். இதைச் செய்ய, தொடங்கு என்பதை கிளிக் செய்து பின்னர் தொடக்க மெனுவில் அடிப்புறத்தில் உள்ள நிறுத்து விண்டோஸ் உரையாடல் பெட்டியை கிளிக் செய்யவும். நிறுத்து விண்டோஸ் உரையாடல் பெட்டியில் உள்ள ஓகே என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி அமர்வினை நீங்கள் முடிக்கலாம்.

கணினியைப் பயன்படுத்தும் போது ஏதாவது பிரச்சினைகளை சந்திக்க நேர்ந்தால் மறுதொடக்கம் தேர்வினைப் பயன்படுத்தி கணினியை மறுபடியும் தொடங்கவும். இதைச் செய்ய நிறுத்து விண்டோஸ் உரையாடல் பெட்டியில் உள்ள மறுதொடக்கம் என்பதை கிளிக் செய்யவும்.

பெரும்பாலான கணினிகளில், கணினியை நிறுத்த அது வேலைசெய்வதை நிறுத்தாத வரை கணினி யூனிட்டில் முன்புறத்தில் உள்ள உண்மையான பவர் பட்டனை கண்டிப்பாக ஒருபோதும் நீங்கள் பயன்படுத்தக் கூடாது.


விசைப்பலகையை உபயோகித்தல்

விசைப்பலகை என்பது, கணினியினுள் ஆணைகளையோ அல்லது உரைகளையோ டைப் செய்ய நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு உள்ளீட்டு சாதனமாகும்.

ஒரு தரமான விசைப்பலகையில் உள்ள பல்வேறு வகையிலான விசைகள் கீழே பட்டியலிடப்பட்டு உள்ளன:

· ஆல்ஃபாநியூமரிக் விசைகள் : இவ்விசைகள் எழுத்துக்களையும் எண்களையும் உள்ளிடப் பயன்படுகின்றன.

· பிரத்தியேக விசைகள் : கன்ட்ரோல் (CTRL), ஷிஃப்ட்(SHIFT), ஸ்பேஸ்பார்(SPACEBAR), ஆல்ட்(ALT), காப்ஸ்லாக்(CAPS LOCK), மற்றும் டாப்(TAB) ஆகிய விசைகள் பிரத்தியேக விசைகளாகும். எப்பொழுது எங்கு பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து, இந்த பிரத்தியேக விசைகள் பிரத்தியேக செயல்களைச் செய்யும்.

· நிறுத்தக் குறியீட்டு விசைகள் : நிறுத்தக் குறியீட்டு விசைகள், நிறுத்தக் குறியீடுகளான முக்காற்புள்ளி(:), அரைப்புள்ளி(;), கேள்விக்குறி(?), ஒரு மேற்கோள் குறி ( ), மற்றும் இரட்டை மேற்கோள் குறிகள் ( ) போன்றவற்றுக்கான விசைகளை உள்ளிட்டவை.

· ஆணை விசைகள் : உள்ளிடு (INS), நீக்கு (DEL), மற்றும் பேக்ஸ்பேஸ்(BACKSPACE) போன்ற விசைகள் ஆணைக்கான விசைகளாகும். உரைகளையும், பொருட்களையும் சேர்க்கவும், நீக்கவும் இந்த விசைகளை நீங்கள் பயன்படுத்தலாம். INSERT விசையை நீங்கள் ON(இயக்க) அல்லது OFF(முடக்க) செய்யலாம். OFF செய்யப்பட்டிருக்கும் பொழுது, உட்செலுத்திய புள்ளியின் வலப்பக்கம் உள்ள எழுத்துக்களின் மீது எழுத உதவும். ON செய்யப்பட்டிருக்கும் பொழுது, உட்செலுத்திய புள்ளியின் வலப்பக்கம் உள்ள எழுத்துக்களின் மீது எழுதாமல், புள்ளிக்கும் வலப்பக்கம் உள்ள எழுத்துக்களுக்கும் ஊடே ௭ழுத உதவும். உட்செலுத்திய புள்ளி என்பது, உள்ளிடப்படும் உரை தோன்றும் இடத்தில் உள்ள சிமிட்டும் நேர்க்கோட்டைக் குறிக்கிறது. DELETE விசை என்பது, உட்செலுத்திய புள்ளியின் வலப்பக்கம் உள்ள டைப் செய்யப்பட்ட உரை, எழுத்துக்கள், மற்றும் இதர பொருட்களை நீக்க பயன்படுத்தப்படும். BACKSPACE விசை என்பது, உட்செலுத்திய புள்ளியின் இடப்பக்கம் உள்ள டைப் செய்யப்பட்ட உரை, எழுத்துக்கள், மற்றும் இதர பொருட்களை நீக்க பயன்படுத்தப்படும்.

குறிப்பு :

நீக்கு (DELETE) மற்றும் பேக்ஸ்பேஸ் (BACKSPACE) விசைகளின் செயல்பாடு, நீங்கள் பயன்படுத்தும் கணினியைப் பொறுத்து வேறுபடும்.

· ENTER அல்லது RETURN விசை : நீங்கள் பயன்படுத்தும் கணினியைப் பொறுத்து, இந்த விசையின் மீது உள்ள பெயர் ENTER அல்லது RETURN ஆக இருக்கலாம். விசையைப் பயன்படுத்தி, புகுத்தும் புள்ளியை ஒரு புதிய வரியின் ஆரம்பத்திற்கு இழுத்து செல்லலாம். சில ப்ரோக்ராம்களில், ஒரு கணினியில் ஆணைகளை அனுப்பவும் ஒரு வேலையை உறுதி செய்யவும் இது பயன்படுகிறது.

· நகர்த்து விசைகள் : அம்புக்குறி விசைகள், ஹோம்(HOME), எண்ட்(END), பேஜ் அப்(PAGE UP), மற்றும் பேஜ் டவுன்(PAGE DOWN) போன்றவை நகர்த்து விசைகளாகும். புகுத்தும் புள்ளியை மேலே, கீழே, வலப்பக்கம் மற்றும் இடப்பக்கம் நகற்ற நீங்கள் அம்புக்குறி விசைகளைப் பயன்படுத்தலாம். ஹோம் விசை என்பது, கர்ஸரை ஒரு உரை வரியின் இடப்பக்க மூலைக்கோ அல்லது ஒரு ஆவணத்தின் மேற்பகுதிக்கோ கொண்டு செல்லப் பயன்படுகிறது. எண்ட்(END) விசை என்பது, ப்ரோக்ராமைப் பொறுத்து, கர்ஸரை ஒரு வரியின் முடிவுக்கோ அல்லது ஒரு ஆவணத்தின் கடைசிக்கோ கொண்டு செல்கிறது. ஒரு ஆவணத்தைப் பார்வையிடும் பொழுது, பேஜ் அப்(PAGE UP) விசை ஒரு பக்கத்தை மேலே நகர்த்தவும், பேஜ் டவுன்(PAGE DOWN) விசை ஒரு பக்கத்தை கீழே நகர்த்தவும் பயன்படுகிறது. பேஜ் அப்(PAGE UP) மற்றும் பேஜ் டவுன்(PAGE DOWN) விசைகள் ப்ரோக்ராமுக்கு ப்ரோக்ராம் வேறுபடும்.

· செயல்பாட்டு விசைகள் : F1 முதல் F12 வரை பெயரிடப்பட்ட விசைகள் செயல்பாட்டு விசைகள் ஆகும். குறிப்பிட்ட சில செயல்களைச் செய்ய நீங்கள் அவற்றைப் பயன்படுத்தலாம். அவற்றின் செயல்பாடுகள் ப்ரோக்ராமுக்கு ப்ரோக்ராம் வேறுபடும். அநேக ப்ரோக்ராம்களில், F1 விசையின் செயல்பாடு, அந்த ப்ரோக்ராமுடன் தொடர்புடைய உதவி கோப்பை அணுகுதல் ஆகும். சில விசைப்பலகைகளில் குறைந்த எண்ணிக்கையிலான செயல்பாட்டு விசைகள் இருக்கலாம்.

· எண் விசைப்பலகை : எல்லா விசைப்பலகைகளிலும் எண் விசைப்பலகைகள் இருப்பதில்லை. அப்படி இருந்தால், 0 முதல் 9 வரை எண்களும், தசாம்ச புள்ளியும், பிரத்தியேக எழுத்துக்களும், நகரும் சின்னங்களும் அடங்கிய ஒரு தனி விசைத் தொகுப்பாக இது இருக்கும். இந்த விசைப்பலகையில் உள்ள நம் லாக்(NUM LOCK) விசை, எண் மற்றும் நகற்று விசைகளுக்கிடையே மாறி மாறிச் செல்ல உதவுகிறது.

· விண்டோஸ் விசை : கன்ட்ரோல்(CTRL) விசை மற்றும் ஆல்ட்(ALT) விசைகளுக்கிடையே உள்ளது விண்டோஸ் விசை ஆகும். இதில் Microsoft லோகோ அல்லது விண்டோஸ் கொடி உள்ளது. இந்த விசை ஸ்டார்ட்(Start) மெனுவைத் திறக்கவோ, அல்லது விண்டோஸ் செயல்பாடுகளை செய்ய வேறொரு விசையுடன் இணையவோ பயன்படுகிறது. விண்டோஸ் விசையின் மிகச் சரியான பயன்பாடு ப்ரோக்ராமுக்கு ப்ரோக்ராம் வேறுபடலாம்..